சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.வீதியின் குறுக்காக சென்ற குழந்தை வேன் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த குழந்தை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.

4 வயதுடைய குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.