திருகோணமலை ஆத்திமோட்டை அரச தமிழ் கலவன் பாடசாலைக்கு, திருகோணமலை றோட்டரிக் கழகத்தால் ஸ்மார்ட் வகுப்பறை, நேற்று (03) ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந்த ஸ்மார்ட் வகுப்பறைக்குத் தேவையான தொடுகைத் திரை, மடிக் கணினிகள், இதரத் தேவையான உபகரணங்களும் கையளிக்கப்பட்டன.

இதன்மூலம், பாடசாலை மாணவ, மாணவிகளின் பாடசாலை வரவை அதிகரிக்கவும்,  நவீன முறையில் கற்றல் செயல்பாடுகளில்  ஈடுபடவும் வெளியூருக்குக் கல்வி பயிலச்செல்லும் மாணவர்களை உள்ளூரில் கல்வி பயில்வதற்கும் ஊக்கமளிக்கும்.