2020 ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர்களின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் இம் மாதம் 16 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதி எந்த வகையிலும் நீடிக்கப்படமாட்டாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.