பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் நாட்டில் தேர்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கண்டி அஸ்கிரிய மகாநாயக்கர்களிடம் ஆசிர்வாதம் பெற்றதன் பின்னர் இன்று (03) காலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.