வாகன விபத்துக்களில் குழந்தைகளுக்கு உயிர் பாதுகாப்புக்காக புதிய உயிர் பாதுகாப்பு வாகன இருக்கையை அறிமுகப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இந்த உயிர் பாதுகாப்பு வாகன இருக்கை தனிப்பட்ட வாகனங்களில் கட்டாயப்படுத்துவதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.
கடந்த 6 தொடக்கம் 7 மாதத்தில் இடம்பெற்ற விபத்துக்களில் ஒரு நாளில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் இதனை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.