பஸ் வண்டிகளில் பயணிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை முறைப்பாடு செய்வதற்கு, சப்ரகமுவ மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை, இரண்டு தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

குறித்த இலக்கங்கள், சகல தனியார் பஸ் வண்டிகளில், ஸ்டிக்கர்கள் மூலம் ஒட்டப்பட்டுள்ளன.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

பஸ் வண்டிகளில் பயணிக்கும் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை 045-2230557, 070-4386109 ஆகிய இலங்களுடன் தொடர்புகொண்டு முறைப்பாடு செய்யமுடியும்.

சப்ரகமுவ மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கீழ்,  மாகாணத்தில் 2,350 தனியார் பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, சப்ரகமுவ மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ரம்யகுமார வீரசிங்க உட்பட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.