தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையைக் கருத்தில்கொண்டு பொலிஸ் தலைமையகத்தில் கொரோனா தொடர்பில் விசேட செயலணி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸ் போக்குவரத்து பொறுப்பதிகாரியும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன,கொரோனா தொடர்பான சம்பவங்கள், தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளதென்றார்.
இன்று (15) பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,
இந்த செயலணியின் செயற்பாடுகளுக்காக 0112- 444480, 0112- 444481, 0115-978730, 0115- 978734, 0115- 978720 ஆகிய 4 தொலைபேசி இலக்கங்களும் lahd@police.lkஎன்ற இணைய முகவரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதென்றார்.