புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள தையல் கடை ஒன்று, நேற்று (14) காலை விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இதனால், ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துகள் எரிந்து நசமாகியுள்ளன.

நேற்று முன்தினம் (13) இரவு, குறித்த தையல் கடை உடைக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில், கொள்ளையர்களால் உடைக்கப்பட்ட கடையைப் பார்வையிடுவதற்காக நேற்று (14) காலை, தடயவியல் பொலிஸார் வருகைதந்த வேளை, தையல் கடை தீ பற்றி எரிந்த வண்ணம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.