எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு உள்ளூர் யாத்திரை, சுற்றுலா மற்றும் பயணங்களை தவிர்க்குமாறு புத்தசாசன, கலாசார மற்றும் மத விவகாரங்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறித்த அமைச்சு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

நாட்டினுள் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு அதனை கட்டுப்படுத்தும் முகமாக பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த அறிவித்தல் விடுக்கப்படுவதாக அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர கேரிக்கை விடுத்துள்ளார்