தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நாளை கையேற்கப்பட மாட்டாது என,  தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   

நாளை (16) பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, பொதுத் தேர்தலை முன்னிட்டு இதுவரை 150 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகளும் 8 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.

வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள், கடந்த 12ஆம் திகதி ஆரம்பமானதுடன் எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.