இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கபடவிருந்த பல பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரீட்சைகள் ஆணையாளர் பீ.சனத் பூஜித இதனை தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் மார்ச் 31 ஆம் திகதி வரை நடைபெறவிருந்த அனைத்து பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.