கொவிட்19 வைரஸ் தொற்றினை கட்டுபடுத்துவது தொடர்பிலான தேசிய மத்திய நிலையத்தின் பிரதானியாக இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மத்திய நிலையமானது, இலக்கம் 1090 ஸ்ரீ ஜயவர்தனபுர ராஜகிரிய என்ற முகவரியில் அமைந்துள்ளது.