இலங்கையில் மேலும் 9 பேர் கொரோனா வைரஸ்தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொவிட்19 வைரஸ் தொற்றினை கட்டுபடுத்துவது தொடர்பிலான தேசிய மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.

இன்றை நாளில் மாத்திரம் 15 கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் ஆறு பேர் இன்று (17) இனங்காணப்பட்டுள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க இதனை தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது.