எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைகையோற்கும் திகதி இன்று (17) நள்ளிரவு 12 மணிக்கு முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் 3 தினங்கள் அரசாங்க விடுமுறை வழங்கப்பட்டுள்ள காரணத்தால், எதிர்வரும் நாட்களில் கிடைக்கின்ற தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை இன்றைய தினம் கிடைத்த விண்ணப்பங்களாக கருதி செயலாற்ற எதிர்ப்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில் தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை கையேற்கும் கடைசித் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.