மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை ஐரோப்பா, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் உங்களதும் சமூகத்தினதும் நலனுக்காக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது 119 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு நேற்று (16) விஷேட அறிக்கை ஒன்று விடுத்திருந்தது.

இருப்பினும் குறித்த நபர்கள் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து தங்களை பதிவு செய்து கொள்ள தேவையில்லை எனவும் பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது 119 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து தங்களை பதிவு செய்து கொண்டால் மாத்திலம் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவிற்கு முரண்பட்ட வகையில் செயல்படுவோருக்கு எதிராக தொற்றுத் தடைக்காப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.