கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 8 பேர், இன்று (18) இனங்காணப்பட்டுள்ளனர்.சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள மத்திய நிலையத்தின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது, அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று (17) இரவு வரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு  43 பேர்  உள்ளானமை உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றால் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கொழும்பு அங்கொடை IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.