பொதுத் தேர்தல், இவ்வாண்டு ஏப்ரல் 25ஆம் திகதியன்று நடத்தப்பட மாட்டாதென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.தேர்தல்கள் ஆணைக்குழுவில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

இந்த நிலையில், குறித்த நாளில் இருந்து 14 நாட்களுக்குள் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துட், தேர்தல் இடம்பெறும்  தினம் தொடர்பில் மார்ச் மாதம் 26 ஆம் திகதியின்  பின்னர் தீர்மானிக்கப்படும் என ஆணைக்குழுவின் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.