இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

கொரோவை ஒழிப்பு மத்திய நிலையத்தினால் இன்று (19) பிற்பகல் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் (17) இரவு வரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு  43 பேர்  உள்ளானமை உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று (18) அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மேலும் இருவர்  பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று மதியம் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த எண்ணிக்கை 56ஆக அதிகரித்தது.

தற்போது, மேலும் மூவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த எண்ணிக்கை 59ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு அங்கொடை IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.