இலங்கையர்களின் விசா காலத்தை நீடிக்குமாறு சர்வதேச நாடுகளிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.மேற்குலக நாடுகளின் தூதுவர்களை சந்தித்த வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத்த ஆரியசிங்க, இந்த கோரிக்கையை நேற்று (18) முன்வைத்துள்ளார்.

நாட்டிலுள்ள வெளிநாட்டவர்களின் விசா காலத்தை நீடிக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் தூதுவர்கள் இதன்போது நன்றி தெரிவித்துள்ளனர்.