வவுனியாவில், இன்று பலத்த பாதுகாப்பு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதுடன், வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் த சில்வா, வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு ஆகியோரின் தலைமையின் கீழ், விசேட அதிரடிப்படையினர் பொலிஸாருடன் இணைந்து வீதி பாதுகாப்பு நடவடிக்கையில் மேற்கொண்டதுடன்,

320 பொலிஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்டச் செயலகத்தைச் சூழவுள்ள பகுதிகள் கண்காணிப்பு நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டுள்ளன. பிரதான வீதிகள் ஐந்து தடை  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இப்பாதுகாப்பு இன்று காலை ஐந்து மணிமுதல் மாலை ஐந்து மணிவரையும் மேற்கொள்ளவுள்ளதுடன், விசேட அதிரடிப்படையினருடன் பொலிஸார் இணைந்து வீதி ரோந்து நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று நண்பகல் 12மணியுடன் நிறைவடையவுள்ளதைத் தொடர்ந்தே, இவ்வாறான பாதுகாப்பு நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.