கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியிடுவதில் தாமதம் ஏற்படக்கூடும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.பெறுபேறுகள் 28 ஆம் திகதி வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இருப்பினும் அரசாங்கம் அறிவித்துள்ள விசேட விடுமுறை காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்படக்கூடும் என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)