அனைத்து விதமான ரயில் சேவைகளும் இன்று (20) பிற்பகல் 3.30 முதல் இடைநிறுத்தப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (23) காலை 6.00 மணி முதல் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, இன்றைய நாளுக்கான இறுதி ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து மஹவ நோக்கு பிற்பகல் 3.30க்கு புறப்பட்டுச் செல்லவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இன்று மாலை 4.00 மணி தொடக்கம் அனைத்து அதிவேக வீதிக்கான வாகனங்களை உள்வாங்குவது மீள அறிவிக்கும் வரையில் நிறுத்தப்பட்டிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அத்துலுவாகே தெரிவித்துள்ளார்.