இத்தாலியில் நேற்று மட்டும் 427 பேர் கொவிட்-19 கிருமித்தொற்றால்  உயிரிழந்த நிலையில் இதுவரை அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,405 ஆக அதிகரித்துள்ளது.சீனாவில் நேர்ந்த மரண எண்ணிக்கையை விட இத்தாலியில் 105 மரணங்கள் அதிகம் பதிவாகியுள்ளன.

இத்தாலியில் 41,000க்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சீனாவில்  சுமார் 80,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து அதிகமானோர் பாதிப்புக்கு ஆளாவதால் மருத்துவமனைகளில் நெருக்கடி நீடிக்கிறது.

முதலணியில் முன்னின்று செயல்படும் சுகாதாரப் பராமரிப்பாளர்கள் பலர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதனால், மனிதவளப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.