சுவிஸ் நாட்டில் இருந்து வந்த மத போதகர் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அதிகளவில் வசிக்கும் அரியாலைப் பகுதி இன்று (23) சுகாதாரத் துறையினரால் முற்றுகையிடப்பட்டது.

அங்கு முற்றுகையிட்ட சுகாதார துறையினர் அங்குள்ள மக்களுக்கான விழிப்புணர்வுகளை வழங்கியுள்ளனர்.

யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் உள்ள பிலதேனியா தேவாலயத்தில் நடந்த கூட்டத்திற்கு சுவிஸ் நாட்டில் இருந்து வந்து போதனை வழங்கிய மத போதகருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியினைச் சேர்ந்த மற்றுமொருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று (22) முன்தினம் வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் சுவிஸ் போதகரின் போதனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை வைத்திய பரிசோதனை செய்யுமாறும், சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு சுகாதார துறையினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன்படி, குறித்த தேவாலயப் பகுதிக்கு அருகில் உள்ள அரியாலை பகுதிக்கு நேற்று காலை சுகாதார துறையினர் சென்றிருந்தனர்.

அங்கு சென்ற அவர்கள் பொது மக்களுக்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்கியதுடன், சோதணை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.