கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில்,  ரஷ்ய பிரஜை உள்ளிட்ட ஐவர், காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி ஐவரும், கராப்பிட்டிய வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைக்கான விசேட பிரிவில், நேற்று (23) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவருகிறது.

அவர்கள், தாய்லாந்தில் இருந்து இந்நாட்டுக்கு சுற்றுலா மேற்கொண்டவர்கள் என்றும் மிரிஸ்ஸ பிரதேசத்திலிருந்து வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என்றும் தெரியவருகிறது.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் மூவர் இலங்கையர்கள் என்று தெரியவருகிறது.