இன்றைய தினம் (25) மாலை 4.30 மணி வரையில் எந்தவொரு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றாளரும் நாட்டில் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கோவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அதன்படி, இதுவரை இந்நாட்டில் 102 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், கொரோனா தொற்று அறிகுறிகளுடன் 255 பேர் நாடு பூராகவும் உள்ள 21 வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நேற்றைய தினம் புதிதாக 5 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்..

மேலும் நாடு பூராகவும் அமைக்கப்பட்டுள்ள 43 தனிமைப்படுத்தல் நிலையங்களில் மூன்றாயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.