இலங்கையில் கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது.ஒஒநேற்றைய தினத்தில் மாத்திரம் புதிதாக 5 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என்ற சந்தேகத்தில் சுமார் 229 பேர் 19 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் 6 வெளிநாட்டவர்கள் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பாக 97 பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையிலும், 27 பேர் வெலிகந்த வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

களுத்துறை நாகொட வைத்தியசாலையில் 12 பேரும், ஹம்பாந்தோட்ட ஆதார வைத்தியசாலையில் 11 பேரும், குருணாகல் வைத்தியசாலையில் 10 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான இருவர் குணமடைந்துள்ளமை குறிப்பிடதக்கது