புதிய கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் இலங்கை கடற்படை ஒரு கிருமிநாசினி அறையை உருவாக்கியுள்ளது.கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை கடற்படை பொது இடங்களில் மற்றும் தனியார் நிறுவனங்களில் பல கிருமி நீக்கம் செய்யும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறதுடன்

கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பிரிவின் கடற்படையினர் கிருமி நீக்கம் செய்வதற்கான புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர்.

கிருமி நீக்கம் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த வடிவமைப்பு முழு உடலையும் ஒரே நேரத்தில் கிருமி நீக்கம் செய்ய உதவுகிறது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், இந்த கண்டுபிடிப்பு தற்போது பல கடற்படை முகாம்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அவற்றில் ஒன்று கடற்படை தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில் நிறுவப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக, கடற்படை வீரர்கள் சிறப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக முகாம்களுக்கு வெளியே தங்களுடைய கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இந்த சோதனை நேரத்தில் கடற்படையின் ஆரோக்கியமான மனித வளத்தை பராமரிக்க முகாமில் ஒரு ஆரோக்கியமான சூழலை பராமரிப்பது கட்டாயமாக இருப்பதால் அவர்கள் வெளியே பணிகள் முடித்து முகாமுக்குள் திரும்பி வருகின்ற போது கிருமி நீக்கம் செய்யப்படுவது அவசியமானது.