கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் இறுதி கிரிகைகள் சர்வதேச தனிமைப்படுத்தல் முறைகளுக்கு அமையவே நடைபெறும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 60 வயதான ஒருவர் நேற்று ஐ.டி.எச் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

மாரவில பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

அவர் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர் என்பதோடு நீரிழிவு மற்றும் அதிக குருதி அழுத்த நோய்க்கும் உள்ளானவர் என தெரிவிக்கப்படுகின்றது.