சிலாபத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்றைய தினம் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 4 மாத குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை 122 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.