மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி பிதேசத்திலுள்ள பண்னை ஒன்றில் பிரயாணித்த உழவு இயந்திரம் பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதை செலுத்தி சென்ற சாரதி உயிரிழந்த சம்பவம் நேற்று (01) மாலையில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

பனிச்சங்கேணி வாகரை பிரதேசத்தைச் சோந்த 22 வயதுடைய என். சுதர்ஷன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பண்னையில் கடமையாற்றிரும் நபர் சம்பவ தினமான நேற்று ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் வீட்டில் இருந்து பண்னைக்கு வேலைக்கு வந்த நிலையில் மாலை 4 மணியளவில் பண்னையிலுள்ள உழவு இயந்திரத்தை எடுத்து பண்னைப்பகுதியில் செலுத்திய போது அங்கிருந்த பனை மரத்துடன் உழவு இயற்திரம் மோதி விபத்துக்கள்ளானதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.