கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கொதட்டுவ மற்றும் மட்டக்குளி பகுதிகளில் வைத்து இவர்கள் இன்று (02) குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

சினமன் கிரேண்ட் ஹோட்டல் மீது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய நபருக்கு உதவிய நபர் கொதட்டுவ பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீது தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிக்கு உதவிபுரிந்த நபர் மட்டக்குளிய பிரதேசத்திலும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.