ஊரடங்கு உத்தரவை மீறிய 11,607 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.அத்துடன் 2878 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் நேற்றுக் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் 588 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 151 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.