வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் 51 நபர்களை கைது செய்துள்ளதுடன் அவர்களின் 12 வாகனங்களை கைப்பற்றியுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்

இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக வவுனியா உட்பட இலங்கையில் பல மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கின் போது தேவையற்ற விதமாக நடமாடிய 51 நபர்களை இவ்வாறு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு ஆலோசனைக்கமைய வவுனியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கின் போது தேவையற்ற விதமாக நடமாடிய கடந்த 22ம் திகதி 4 நபர்களும் , 23ம் திகதி 2 நபர்களும் , 25ம் திகதி 5 நபர்களும் , 27ம் திகதி 6 நபர்களும் , 1ம் திகதி 8 நபர்களும் , 2ம் திகதி 10 நபர்களும் , 3ம் திகதி 16 நபர்களும் மொத்தமாக ஊரடங்கு சட்ட காலத்தினுள் 51நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 12 வாகனங்களையும் பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.

ஊரடங்கு சட்ட காலத்தினுள் தேவையற்ற விதத்தில் வீதியில் நடமாடுபவர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் ஊரடங்கு காலப்பகுதியில் வெளியில் செல்வதினை தவிர்த்து பொதுமக்களை வீட்டினுள் இருக்குமாறு வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது