யாழ் – காரைநகர் வீதியின் அராலி வீதி ஓட்டுமடம் பகுதியிலுள்ள புதிய குடியிருப்பு பகுதி நாளாந்த உழைப்பாளி மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் உணவுக் கஷ்டத்தை போக்கும் வகையில் பிரதேச அமைப்பாளர் திரு. ஜெகன் மற்றும் யாழ்.மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந்த் ஆகியோர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றதின் பேரில், தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் உதவியில் அம்மக்களுக்கான இரவுணவு ப.தர்சானந்த் அவர்களால் வழங்கப்பட்டது. நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கு.மதுசுதனும் கலந்து கொண்டிருந்தார்.