இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி இதுவரை நாட்டில் 189 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

42 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 228 பேர் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.