19 மாவட்டங்களில் இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.எனினும், இரத்தினபுரி, பெல்மதுளை பகுதியில் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படமாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளூடாகப் பயணிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் அமுலாகும் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 6 மணிக்கு மீண்டும் தளர்த்தப்படும்.

அத்துடன், அன்றைய தினம் மாலை 4 மணிக்கு மீண்டும் அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் காணப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.