இன்றைய தினம் மேலும் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதனையடுத்து, கொரோனா  வைரஸ் தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது.

56 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.