யாழ்.வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட 3 போ் யாழ்.சிறைச்சாலையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.மாகாண சுகாதார பணிப்பாளா் மருத்துவா் ஆ.கேதீஸ்வரனின் பணிப்பிற்கமையவே இவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

குறித்த 3 பேரும் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து, இந்திய கடத்தல்காரா்களுடன் பழகி கஞ்சாவை பெற்றுவந்துள்ளனா்.

குறித்த 3 பேரும் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டு பருத்துறை நீதிவான் முன்னிலையில் ஆஜா் செய்யப்பட்டு யாழ்.சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனா்

இந்நிலையில் குறித்த நபா்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம். என சந்தேகிக்கப்படும் நிலையில்,

அவா்களை தனிமைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாாிகளிடம் மாகாண சுகாதார பணிப்பாளா் மருத்துவா் ஆ.கேதீஸ்வரன் கேட்டுள்ளாா்.

இதற்கமைய குறித்த நபா்கள் சிறைச்சாலையில் பிரத்தியேக இடமொன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், அவா்களுக்கு அடுத்த சில நாட்களில் இரத்த பாிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனை மாகாண சுகாதார பணிப்பாளா் மருத்துவா் ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியிருக்கின்றாா்.