இலங்கையில் மேலும் ஒருவர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த அண்மையில் இந்தியாவில் இருந்து வருகை தந்த 59 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 238 ஆக  அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 63 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர்  உயிரிழந்துள்ளனர்.