உலகில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 154,245 ஆக அதிகரித்துள்ளதுடன், 2,250,405 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.உலக நாடுகளின் தர வரிசையில் அமெரிக்காவிலேயே அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை 37,158 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர்.

ஸ்பெயினில் 20,002 பேரும், இத்தாலியில் 22,745 பேரும், பிரான்ஸில் 18,681 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

மேற்குறிப்பிட்ட 4 நாடுகளிலேயே அதிகளவான மரணங்கள் இதுவரை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது