கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 5 மணி வரையில் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப் படுவதாக கூறப்பட்டு இருந்த போதிலும் அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையில் குறித்த மாவட்டங்களுக்குள் எவருக்கும் உட்பிரவேசிக்கயோ அல்லது வெளியேறவோ முடியாது எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் ஏனைய மாவட்டங்களில் இன்று (20) தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 24 ஆம் திகதி வரை தினமும் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை அமுல்படுத்தப்படும்.

மேலும், குறித்த மாவட்டங்களில் ஏப்ரல் 24 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணி வரையில் தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஏப்ரல் 25 மற்றும் 26 ஆம் திகதிகளான வார இறுதிநாட்களில் நாடளாவிய ரீதியில் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் வேலையில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் தொடர்பில் முன்னர் குறிப்பிட்ட நிபந்தனைகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது