கொவிட் 19 வைரஸ் பரவலையடுத்து, வெளிநாடுகளில் சிக்கியுள்ள மாணவர்கள் சிலரை நாளை (21) நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளதாக, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இந்தியா மற்றும் பாகிஸ்தானிலுள்ள பல்கலைக்கழகங்களில கல்வி கற்கச் சென்ற சுமார் 100 க்கு மேற்பட்டோர், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு நாளை (21) அழைத்துவரப்படவுள்ளனர்.

இவ்வாறு அழைத்துவரப்படும் சகலரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.