கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையில் வசிக்கும் 242 குடும்பங்களைச் சேர்ந்த1010 பேர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய தினமும் கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையில் ஐந்து தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 309 வரை அதிகரித்துள்ளது.

முன்னதாக, நேற்று (20) காலையில் 24 நோயாளர்களும், பிற்பகலில் 8 தொற்றாளர்களும் மாலையில் ஒரு தொற்றாளரும் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றுக்கு உள்ளான 98 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அத்துடன், இலங்கையில் 7 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.