கடந்த சில தினங்களாக கொழும்பு பகுதியில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதால், கொழும்பு தோட்ட பகுதிகளில் பீ.சீ.ஆர் சோதனையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், கொழும்பு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இதனையடுத்து நகரிலுள்ள குடிசைக் குடியிருப்புகளைச் சேர்ந்த மக்களிடம் பீ.சீ.ஆர் சோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.