செய்திக் குறிப்பு –

கோவிட் 19 என்ற கொடிய தொற்று நோயின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட   தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்கப்பட்டபோது , ஒரு கணமும் தயங்காது பணம் தந்து உதவ பல கருணை உள்ளங்கள் முன்வந்திருந்தார்கள்.நீங்கள் தந்து உதவும் நிதி உதவிகள் யாழ்ப்பாணப் பகுதிகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன் ஆகியோர்களின் ஊடாகவும் , ஏனைய பகுதிகளுக்கு மாவட்ட அமைப்பாளர்களின் ஊடாகவும் வழங்கப்படும் என்று கோரப்பட்ட போது ஒரு கணமும் தாமதிக்காது தருகிறோம் என்று இந்த அன்பு உள்ளங்கள் ஆதரவு நல்கினார்கள்.

கூறியதோடு நிற்காது அடுத்த சில மணித்தியாலங்களில் அவர்களின் உதவிகள் ஒன்றின் பின்பு ஒன்றாக வந்தடைந்தது. நண்பர்கள், நண்பர்களின் உறவினர்கள், ஊரவர்கள் என்று கேட்கப்பட்ட அனைவருமே உயிர் நேயத்தோடு, அன்பு கொண்ட உள்ளதோடு உதவி இருக்கின்றார்கள். ஒரே குடும்பத்தில் சகோதர சகோதரிகள், தாய், தந்தை , மகள், மருமகன், மாமன் என்று மனிதநேயத்தோடு தமது பங்கினை செலுத்தினார்கள்.

காலத்தினால் செய்த நன்றி சிறிதேனும் ஞாலத்தில் மாணப் பெரிது என்றார் திருவள்ளுவர். காலத்திற்கு ஏற்ப செய்யும் உதவி இந்த உலகை விட பெரியதாகும்.அக்கறையுள்ள ஒரு மேய்ப்பனின் கவனிப்பில் ஆடுகள் நலமாக இருக்கும் என்றார் இஜேசு. உங்களை போன்றவர்களின் உதவிகள் எமது பயனாளிகள்  பாதுகாப்பாகவும்  பசி இன்றியும் வாழுவதற்கு  உதவியாக அமையும்.

உதவி புரிந்த உள்ளங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம். (We humbly bow to the helpful minds).

உதவிய உள்ளங்கள்-

1) சிவசுப்பிரமனியம் சுபேந்திரன், இணுவில்                      100.00 CAD.
2) பரராஜசிங்கம் செல்வச்சந்திரன், இணுவில்                      50.00 CAD.
3) பரராஜசிங்கம் சுபா, இணுவில்                                  50.00 CAD
4) பரராஜசிங்கம் ரவிந்திரநாதன் (ரவி) இணுவில்                  100.00 CAD
5) தர்மராசா   சிவகுமார் (சிவா) இணுவில்                       200.00 CAD
6) செந்தில்நாதன் பிரதீபராஜ், கோண்டாவில்                       50.00 CAD
7) இரத்தினசபாபதி ஜிந்துஜா, கரம்பன்                             50.00 CAD
8) இரத்தினசபாபதி விஜெயசேகரன், கரம்பன்                       50.00 CAD
9) இரத்தினசபாபதி மகேஸ்வரின், கரம்பன்                        50.00 CAD
10) சின்னதுரை திருப்பதிசிவம், வேலனை                          50.00 CAD
11) பாலசிங்கம் கிருபாகரன், கட்டுவன்                             50.00 CAD
12) சன்முகநாதன் பாஸ்கரன், நவாலி தெற்கு, மானிப்பாய்            50.00 CAD
13) இராசையா மோகனதாஸ், இணுவில்                           50.00 CAD
14) ஜொசேப் சார்ள்ஸ், வவுனியா.                                 50.00 CAD
15) செல்வரத்தினம் குணபாலன், இணுவில்.                        50.00 CAD
16) குணபாலன் ஆகாசா,விக்ரோரியா,அஸ்ரா                      50.00 CAD

செ. குணபாலன்
அமைப்பாளர்
கனடா
19.04.2020