எதிர்வரும் நாட்களில் ரயில்களில் பயணம் செய்ய எதிர்பார்த்துள்ள பயணிகளுக்கான விசேட பாதுகாப்பு நடைமுறைகளைமுன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதார பிரிவினர் பல புதிய நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.

அதற்கமைய முச்சக்கர வண்டிகளில் இரண்டு பயணிகள் மாத்திரமே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிகையலங்கார நிலையங்களை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க இது தொடர்பில் அறிவித்துள்ளார்.