இலங்கையில் மேலும் 6 பேர் கொரோனா (கொவிட் 19) வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி இன்றைய தினம் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த 11 பேரும் கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த தனிமைப்படுத்த மத்திய நிலையங்கள் மற்றும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 379 ஆக  அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 107 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர்  உயிரிழந்துள்ளனர்.