சீனாவில் உள்ள ஓர் இறைச்சி சந்தையில் தொடங்கியதாக கருதப்படும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது கிட்டத்தட்ட அனைத்து உலக நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.உலக சுகாதார நிறுவனத்தால் ´பெருந்தொற்று´ என்று அறிவிக்கப்பட்டுள்ள கோவிட்-19 தொற்றால் அமெரிக்காவே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவிட்-19 தொற்று இப்போது சீனா, கிழக்காசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய கண்டம் ஆகிய பகுதிகளில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2,708,885 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த கொடிய வைரஸூக்கு இதுவரை 190,858 பேர் உயிரிழந்துள்ளனர்.