நேபாளத்தில் தங்கியிருந்த 76 இலங்கை மாணவர்களுடன் சிறப்பு விமானம் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு எல் 1425 என்ற சிறப்பு விமானம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவர்களை தற்போது தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேபாளம் நாட்டில் சிக்கியிருந்த 93 மாணவர்களை அழைத்து வருவதற்காக இன்று காலை 8 மணியளவில் இலங்கையில் இருந்து குறித்த விமானம் புறப்பட்டுச் சென்றிருந்தது.